நான் கோவையில் பிறந்து வளர்தேன். கல்லுரி படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு மார்க்கெட்டிங் பற்றிய படிப்பு மேற்கொள்ள வந்தேன். இதன் இடையில் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு இரண்டு வருடம் வேலை செய்து கொண்டிருக்கையில் அந்த நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் வாங்கியது. அவர்களின் கொள்கைகள் பிடிக்காமல் என்னுடம் பனி புய்ந்த எட்டு பேர் கூட்டாக வேலையை ராஜினாமா செய்தோம். சுமார் இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன். பின் எனக்கு ஜேர்மன் நாட்டு விமான நிறுவனம் "LUFTHANSA" வில் வேலை கிடைத்தது. சென்னையில் 6 வருடங்கள் பனி புரிந்துவிட்டு பெங்களூருக்கு மாற்றம் கிடைத்தது. அங்கு ஆறு வருடங்கள் வேலை செய்து விட்டு கடந்த 2007 ம் வருடம் கத்தார் நாட்டிலுள்ள தோஹாவிற்கு மாற்றலாகி வந்தேன்.